கன்டெய்னர் மீது மினிலாரி மோதி 3 பேர் பலி: மஞ்சுவிரட்டில் பங்கேற்று விட்டு வரும் போது நடந்த சோகம்

கன்டெய்னர் மீது மினிலாரி மோதி 3 பேர் பலி: மஞ்சுவிரட்டில் பங்கேற்று விட்டு வரும் போது நடந்த சோகம்
நொறுங்கிய மினி லாரி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே பச்சூர் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது பின்னால் வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகேயுள்ள கழஞ்சூர் என்ற ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கள் ஜல்லிக்கட்டு காளையை மினி லாரி ஒன்றில் ஏற்றிக் கொண்டு போய் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டுவிட்டு இன்று மதியம் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சென்னை -பெங்களூரு நெடுஞ்சாலையில் பச்சூர் சோதனைச் சாவடி அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கே சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது இவர்கள் வந்த மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக பயங்கரமாக மோதியது. இதில் மினி லாரியின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

மினி லாரி சேதமடைந்ததில் அதில் அமர்ந்திருந்த தீனா, மதன், நாகராஜ் ஆகிய மூன்று இளைஞர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அதில் இருந்த 4 இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து வந்த நாட்றாம்பள்ளி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in