கடலூரில் தரைமட்டமான வெடி தொழிற்சாலை: பறிபோன மூவரின் உயிர்

கடலூரில் தரைமட்டமான வெடி தொழிற்சாலை: பறிபோன மூவரின் உயிர்
தரைமட்டமான நாட்டு வெடி தொழிற்சாலை

கடலூர் அருகே நாட்டு வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் மூவர் உயிரிழந்தனர். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் அருகே கேப்பர் மலை அருகேயுள்ள எம் புதூர் என்ற இடத்தில் ஸ்ரீதர் என்பவர் நாட்டு வெடிகள் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். அந்த ஆலையை அவருடைய மருமகன் மோகன்ராஜ் நடத்தி வந்தார். நாட்டு வெடிகள் தயாரிக்கும் அந்த தொழிற்சாலையில் 7 பேர் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இன்று மதியம் அந்த ஆலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் அங்கிருந்த வெடிகள் வெடித்துச் சிதறியது. கட்டிடம் முழுமையாக இடிந்து நொறுங்கியது. அதில் அங்கு பணியிலிருந்த அணைவரும் அதில் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்த சித்திரா (35), அம்பிகா (50), சத்யராஜ் (34) ஆகிய மூவர் உயிரிழந்தனர். ராஜி, வசந்தா ஆகிய இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மேலும் அங்கு வெடி வாங்க வந்த வெள்ளக்கரை பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் என்பவரும் இதில் சிக்கி படுகாயமடைந்தார். அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கடலூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிந்த மூவரின் குடும்பங்களுக்கும் தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in