அசாமில் அதிகரிக்கும் டெங்குவால் மூன்று பேர் பலி: இன்று முதல் 5 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை

அசாமில் அதிகரிக்கும் டெங்குவால் மூன்று பேர் பலி: இன்று முதல் 5 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை
ANI

அசாம் மாநிலம் திபு நகரில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் அங்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் சில மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில், டெங்குவைக் கட்டுப்படுத்த அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஸ் சர்மா சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்த நிலையில், திபு நகரில் டெங்கு தீவிரமாக பரவி வருகிறது. இங்கு இதுவரை டெங்கு காய்ச்சலால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க திபு நகராட்சி வாரியம் மற்றும் திபு பெருநகர பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் உட்பட அங்கன்வாடி பள்ளிகள் முதல் கல்லூரிகள் வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் ஐந்து நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் வரும் நவம்பர் 12-ம் தேதி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in