
முன்விரோதத்தில் மூன்று ஆடுகளை விஷம் வைத்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி வடக்கு விலாகத்தைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(47). விவசாயியான இவர் ஏராளமான ஆடுகளையும் வளர்த்துவருகிறார். இவர் தினசரி ஆடுகளை காலையில் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் வீட்டில் கொண்டுபோய் கொட்டகையில் விடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை அவரது கொட்டகையில் நின்ற மூன்று ஆடுகள் அடுத்தடுத்து உயிர் இழந்தன.
உடனடியாக கால்நடை மருத்துவரை சென்றுப் பார்த்தார். அவர்கள் ஆட்டிற்கு விஷம் கொடுத்திருப்பதைக் கண்டுபிடித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அரிகிருஷ்ணன், இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் நடத்திய விசாரணையில் அதேபகுதியைச் சேர்ந்த பரமசிவன் என்ற வாலிபர் ஆடுகளுக்கு விஷம் கொடுத்தது தெரியவந்தது. போலீஸார் அவரிடம் தொடர்ந்து செய்த விசாரணையில், வயல் தொடர்பாக அரிகிருஷ்ணனுக்கும், பரமசிவனுக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. இதனால் அவர் ஆடுகளுக்கு விஷம் கொடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. பரமசிவனிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.