செப்டிக் டேங்க் பணியின்போது பரிதாபம்: விஷவாயு தாக்கி மூவர் பலி

செப்டிக் டேங்க் பணியின்போது பரிதாபம்: விஷவாயு தாக்கி மூவர் பலி
செப்டிக் டேங்க் பணியின்போது பரிதாபம்: விஷவாயு தாக்கி மூவர் பலிசெப்டிக் டேங்க் பணியின்போது பரிதாபம்: விஷவாயு தாக்கி மூவர் பலி

புதிய வீடு கட்டுமானத்தின்போது செப்டிங் டேங்கில் அமைக்கப்பட்டு இருந்த சென்ட்ரிங் பலகைகளை பிரித்துக் கொண்டு இருந்தபோது, விஷ வாயு தாக்கி மூவர் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம், கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் தனது பூர்வீக நிலத்தில் புதிதாக சொந்த வீடு கட்டிவருகின்றார். நேற்று இரவு 8.30 மணி அளவில் இவரது புதுவீட்டில் செப்டிக் டேங்க்கில் அமைக்கப்பட்டு இருந்த சென்டரிங் பலகைகளை பிரிக்கும் பணி நடந்தது. இந்தப் பணியில் கிருஷ்ணமூர்த்தியின் வீட்டைக் கட்டும் கொத்தனார்கள் பாலசந்தர், சக்திவேல் ஆகியோரோடு வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்து வேலை செய்துகொண்டு இருந்தார்.

இந்நிலையில் சென்டரிங் பலகைகளை அகற்றிக் கொண்டு இருந்த கொத்தனார் பாலசந்தர்(32) திடீரென மயங்கி விழுந்தார். இதைப் பார்த்ததும் சக கொத்தனார் சக்திவேல், வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பாலசந்தரைக் காப்பாற்ற செப்டிங் டேங்கில் இறங்கினர். ஆனால் அவர்களும் விஷ வாயுத் தாக்கி மயங்கினர். இதைப் பார்த்து சுற்றுவட்டாரத்தினர் தீயணைப்புத்துறைக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்துவந்து மூவரையும் செப்டிக் டேங்கில் இருந்து மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் விஷ வாயு தாக்கி இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். வழக்குப் பதிந்துள்ள ஸ்ரீமுஷ்ணம் போலீஸார், ’புதிய வீட்டின் செப்டிங் டேங்கில் விஷவாயு வெளிப்படுமா, அதன் மூலம் உயிர்ப்பலிகள் ஏற்படுமா’ என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in