விழுப்புரம் கள்ளச்சாராய சாவுகள் எதிரொலி; 2 இன்ஸ்பெக்டர்கள் இடைநீக்கம்!

தமிழக டிஜிபி அதிரடி!
டிஜிபி சைலேந்திர பாபு
டிஜிபி சைலேந்திர பாபு

விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் குடித்து மூவர் உயிர் இழந்த சம்பவத்தில், இரு இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், எக்கியார்குப்பம் பகுதியில் நேற்று இரவு ஏராளமானோர் கள்ளச்சாராயம் அருந்தி உள்ளனர். அதில் 16 பேருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவர்கள் இதனால் சிகி்ச்சைக்காக புதுவை, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 6 பேர் மயக்கமடைந்த நிலையிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதில் சிகிச்சை பலன் இன்றி சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூவர் உயிர் இழந்தனர். மேலும் 13 பேருக்கு மரக்காணம், புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இவர்களுக்கு கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அமரன் என்பவரைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் முன்கூட்டியே உரிய நடவடிக்கை எடுத்து கள்ளச்சாராய வியாபாரத்தைத் தடுக்கத் தவறிய மரக்காணம் காவல் ஆய்வாளர் அருள் வடிவேல் அழகன், மதுவிலக்கு கலால் காவல்துறை ஆய்வாளர் மரிய சோபி மஞ்சுளா ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in