வாழைத்தோப்பில் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட மின்வேலி: காவலாளியைப் பார்க்க வந்த மூவரின் உயிரைக் குடித்தது

வாழைத்தோப்பில் பன்றிகளுக்கு வைக்கப்பட்ட மின்வேலி:  காவலாளியைப் பார்க்க வந்த மூவரின் உயிரைக் குடித்தது

உறவினரைப் பார்க்கச் சென்ற மூவர் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் விழுப்புரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்துள்ள ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சடகோபன். இவர் ராஜபாளையம் கிராமத்தில் தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழைத்தோப்பு மற்றும் வேர்கடலை பயிரிட்டுள்ளார். வாழைத்தோப்பைக் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால் தோட்டத்தைச் சுற்றி அவர் மின்வேலி அமைத்துள்ளார். இந்த வாழைத்தோப்பிற்கு வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் காவலாளியாக இருந்து வருகிறார்.

இவரைப் பார்ப்பதற்காக வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்த முருகதாஸ்(40), வெங்கடேசன்(45), சுப்பிரமணி(38) ஆகிய மூவரும் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கிய மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பிரம்மதேசம் போலீஸார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மூவர் இறப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரம்மதேசம் போலீஸார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த சடகோபனைத் தேடி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூவர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in