பட்டப்பகலில் தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்: தடுக்க வந்த இருவரையும் கொலை செய்ததால் பரபரப்பு

பட்டப்பகலில்  தாயைக் கட்டையால் அடித்துக் கொன்ற மகன்: தடுக்க வந்த இருவரையும் கொலை செய்ததால் பரபரப்பு

ஜம்மு காஷ்மீரில் தாயை மகன் கட்டையால் தாக்கியதை தடுத்த இருவரையும் அவர் தாக்கினார். இதில் தாக்கப்பட்ட மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக்கைச் சேர்ந்தவர் ஜாவீத் அஹ்மத். இன்று காலையில் இவர் ஒரு கட்டையை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தார். அப்போது எதிர்பட்ட அவரது தாய் ஹபீசாவை கட்டையால் தாக்கினார். இதில் ரத்தம் சொட்ட சொட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப் பார்த்து சாலையில் சென்ற குலாம்நபி, முகமது அமீன் ஆகியோர் தடுத்தனர். அவர்களையும் ஜாவீத் அஹ்மத் கொடூரமாக தாக்கினார். இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தைத் தடுக்க வந்த மேலும் 7 பேரை ஜாவீத் அஹ்மத் கடுமையாக தாக்கினார். அவர்கள் 7 பேரும் உடனடியாக அனந்த்நாக்கில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்த போலீஸார் விரைந்து சென்று ஜாவீத் அஹ்மத்தை சுற்றி வளைத்தனர். அப்போது அவர் போதையில் இருந்தது தெரிய வந்தது. சிறிது மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஜாவீத் அஹ்மத்தை போலீஸார் கைது செய்தனர். பட்டப்பகலில் மூன்று பேர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அனந்த்நாக் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in