கலெக்டர் அலுவலகம் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி: கோவையில் பரபரப்பு

தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீஸ்
தீக்குளிக்க முயன்றவரை தடுத்து நிறுத்திய போலீஸ் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 ஆட்டோ ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி: கோவையில் பரபரப்பு
Updated on
1 min read

தங்களை ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்க மறுத்து சிலர் பிரச்சினை செய்வதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி  மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக  தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் கோவையில்  பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியது. 

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த முனீர், ஓம் முருகா, பிரகாஷ் ஆகிய மூன்று பேரும் ஆட்டோ ஓட்டி தொழில் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் அங்கு உள்ள சக ஆட்டோ ஓட்டுநர்கள் இவர்கள் மீது மதரீதியாகவும், சாதி ரீதியாகவும், தீண்டாமையைக் கடைப்பிடித்து தங்களை ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் தொடர்ந்து பிரச்சினை கொடுத்து வந்ததாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

இதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடி தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஒருஆட்டோ ஓட்டுநரின் தாய், ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக் கண்ட காவலர்கள் உடனடியாக ஓடிவந்து மண்ணெண்ணெய்  கேன்களை பிடுங்கி,  அவர்களைத் தடுத்து நிறுத்தி, மூன்று பேரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர்களின் குடும்பத்தினர் கூறுகையில், "குழந்தைகளின் பள்ளிச் செலவிற்கு கூட வழியில்லாத நிலையில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த மற்ற ஆட்டோ ஓட்டுநர்களின் அழுத்தம் எங்களை மேலும் மன வேதனைக்கு உள்ளாக்குகிறது" என்றனர். கோவை ஆட்சியர் அலுவலகம் முன் நிகழ்ந்த இத்தீக்குளிப்பு முயற்சியால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in