வேறு பெண்ணுடன் தொடர்பால் மனைவி தற்கொலை: வாலிபரை கழுத்தை அறுத்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்

வேறு பெண்ணுடன் தொடர்பால் மனைவி தற்கொலை: வாலிபரை கழுத்தை அறுத்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள்

வாலிபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மைத்துனர் உள்பட மூவரை பெருங்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே ஈச்சநேரி பகுதியில் நேற்று வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பெருங்குடி காவல்துறையினர் வாலிபரின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, இறந்தவரின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெருங்குடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

விசாரணையில், இறந்த வாலிபர் மதுரை கீரைதுரையைச் சேர்ந்த தவமணி மகன் 30 வயதான காளிதாஸ் என்பது தெரியவந்தது. இவரது மனைவி வனிதா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். காளிதாஸ் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகக் கருதி வனிதா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால், மனைவியின் உறவினர்கள் காளிதாஸைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், காலிதாஸின் மைத்துனர் முத்துப்பாண்டியைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர்.

அதில், காலிதாஸின் மைத்துனர் முத்துப்பாண்டி மற்றும் அவரது நண்பர் மாரிமுத்து மற்றும் வில்லாபுரத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி ஆகிய 4 பேரும் கொலை செய்யப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மது அருந்தி உள்ளனர். அதன்பின்னர், காளிதாஸைக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, பெருங்குடி காவல்துறையினர் மைத்துனர் முத்துப்பாண்டி மற்றும் நண்பர்கள் மாரிமுத்து, முத்தப்பாண்டி ஆகிய மூவரையும் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in