காட்டுப்பகுதியில் நின்ற வேன்; திறந்தபோது போலீஸ் அதிர்ச்சி: மாணவிகளுக்கு வினையான இன்ஸ்டாகிராம் பழக்கம்

காட்டுப்பகுதியில் நின்ற வேன்; திறந்தபோது போலீஸ் அதிர்ச்சி: மாணவிகளுக்கு வினையான இன்ஸ்டாகிராம் பழக்கம்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மாணவிகளை சந்திக்க அழைத்து பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு இளைஞர்கள் மற்றும் ஒரு சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், கல்லலைச் சேர்ந்த பெண் ஒருவர், நர்சிங் படிப்பதற்கு சென்ற தனது 17 வயது மகளைக் காணவில்லை என்று கடந்த 27-ம் தேதி காவல்துறையினரிடம் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையில், நர்சிங் மானவி தனது 12-ம் வகுப்பு தோழியுடன் வெளியே சென்றது தெரியவந்தது. இருவரையும் காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று காவல்துறையினர் ரோந்துப் பணியில் இருந்த போது காரைக்குடி இலுப்படிக்கோட்டை காட்டுப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் வேன் ஒன்று நின்று கொண்டிருந்தது. கதவைத் திறக்குமாறு காவல்துறையினர் கூறவே வேனில் இருந்து மூன்று இளைஞர்கள் இறங்கியுள்ளனர். மேலும், உள்ளே இரண்டு மாணவிகள் இருப்பதை அறிந்த காவல்துறையினர் காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனைவரையும் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக்கான 19 வயது விக்னேஷ் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியுடன் இன்ஸ்டாகிராமில் பழகியது தெரியவந்தது. இந்நிலையில், விக்னேஷ் அப்பெண்ணை காரைக்குடிக்கு அழைக்கவே, தனது தோழியான நர்சிங் மாணவியுடன் பயணித்து வந்துள்ளார். அங்கு விக்னேஷ் மற்றும் அவரது நண்பர்களான கல்லூரி மாணவர் கவியரசு மற்றும் 16 வயது சிறுவனுடன் இரண்டு மாணவிகளையும் அழைத்துக்கொண்டு பகல் நேரத்தில் சினிமா, பார்க் என ஊர் சுற்றி வந்துள்ளனர்.

இரவு நேரத்தில் இலுப்படிக்கோட்டை பகுதியில் வேனை நிறுத்தி இரண்டு மாணவிகளையும் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அந்த நேரம் ரோந்த காவல்துறையினரிடம் சிக்கிக்கொள்ளவே விக்னேஷ், கவியரசு மற்றும் 16 வயது சிறுவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விக்னேஷ் மற்றும் கவியரசை சிறையில் அடைத்து 16 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in