வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட மூவர் கைது

மன்னிப்பு கேட்ட வதந்தி பரப்பிய நபர்
கைது செய்யப்பட்ட மனோஜ் யாதவ்
கைது செய்யப்பட்ட மனோஜ் யாதவ்வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்ட மூவர் கைது

செங்கல்பட்டில் வேலை பார்த்து வரும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலி வீடியோ வெளியிட்டவர் உட்பட மூவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கட்டிட வேலை பார்த்து வருகின்றனர். வட மாநில தொழிலாளர்கள் பிரச்சினை பேசு பொருளானதும் இங்கு பணிபுரியும் மனோஜ் யாதவ் தன்னுடன் இருக்கும் சக ஊழியர்களுடன் சேர்ந்து இந்தியில் ’’நாங்க இந்திக்காரங்களாக இருக்கிறோம். சென்னையை விட்டு வெளியே அனுப்புறாங்க. நாங்க வெளியே போறது எப்படி பஸ்ல எங்க ஆளு ஒருத்தர அடிச்சாங்க. ரயில போனாலும் அடிப்பாங்க. இங்க எங்க ஆளு ஒருத்தருக்கு அடிபட்டு இருக்கு உடம்பு சரி இல்லை. ஹாஸ்பிடல் போனா பார்க்க மாட்றாங்க. எப்படி ஊருக்கு செல்வது? அரசு தான் எங்களுக்கு உதவி செய்யணும். எங்க அரசாங்கமும் உதவி செய்ய வேண்டும் ’’ என பேசிய காணொலியை அவருக்குச் சொந்த மாநிலமான ஜார்க்கண்ட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோ குறித்து போலீஸார், மனோஜ் யாதவ் மற்றும் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த வீடியோ போலியானது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து இந்த வீடியோவில் பேசிய, பதிவு செய்த மூவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். மேலும் போலி வீடியோவை வெளியிட்ட மனோஜ் யாதவ் தவறான வீடியோவை பரப்பியதற்கு மன்னிப்புக் கோரும் வீடியோவையும் போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in