
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறைச்சிக்காக அரியவகை இந்திய முள்ளம்பன்றிகளைக் கொன்றதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் புடானில் இறைச்சிக்காக அரியவகை இந்திய முள்ளம்பன்றிகள் வேட்டையாடப்பட்டதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் காசுநாக்லா கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு அரிய வகை இந்திய முள்ளம்பன்றிகள் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டு சமையல் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர், முள்ளம்பன்றிகளின் இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதன் பின் இவற்றை யார் வேட்டையாடினர் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அதே ஊரைச் சேர்ந்த தர்மவீர், ஹரிசிங், பிரமோத் ஆகியோர் அரிய வகை இந்திய முள்ளம் பன்றிகளை இறைச்சிக்காக கொன்றது தெரிய வந்தது. அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வனத்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து வனப்பாதுகாவலர் அமித்குமார் சோலங்கி கூறுகையில், "வனவிலங்கு சட்டப்படி அரியவகை உரியனங்களைப் பாதுகாக்க வேண்டும். ஆனால், அழியக்கூடிய நிலையில் உள்ள அரிய வகை இந்திய முள்ளம் பன்றிகளை இறைச்சிக்காக சிலர் வேட்டையாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.