நள்ளிரவில் விமான நிலையம் அருகே கத்திமுனையில் வழிப்பறி: ஸ்கெட்ச் போட்டு கொள்ளையர்களைத் தூக்கிய போலீஸ்!

கைது செய்யப்பட்ட மூவர்.
கைது செய்யப்பட்ட மூவர்.

மதுரை விமான நிலையம் அருகே வேலையை முடித்துவிட்டு திரும்பிய வாலிபரிடம் கத்தி முனையில் பணத்தை பறித்த மூன்று பேரை அவனியாபுரம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடி அம்பேத்கார்நகரைச் சேர்ந்தவர் பாண்டியராஜன் (22). கூலி வேலை செய்து வரும் இவர், நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகர் நான்கு வழிச்சாலை சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் பாண்டியராஜனிடம் கத்தியைக் காட்டி 950 ரூபாய் பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து, பாண்டியராஜன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் வழிப்பறியில் ஈடுபட்டவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில், மதுரை கீரைத்துரையைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் (24), சக்திவேல் (23), செந்தூர் ராஜ் (21) ஆகியோர் பாண்டியராஜனிடம் வழிப்பறி செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் இன்று கைது செய்த அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு அவனியாபுரம் பெட்ரோல் பங்கில் லாரி டிரைவரிடம் இதே கும்பல் வழிப்பறியில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in