பிரதமர் மோடியின் பேரணியில் பறந்த ஆளில்லா ட்ரோன்: போலீஸார் அதிரடி நடவடிக்கை

பிரதமர் மோடியின் பேரணியில் பறந்த ஆளில்லா ட்ரோன்: போலீஸார் அதிரடி நடவடிக்கை

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள பாவ்லா கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பேரணி நடைபெறும் இடத்திற்கு அருகே கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் பறக்கவிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பாவ்லா கிராமத்தில் நேற்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி உரையாற்றினார். பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடம் அருகே ட்ரோன்களை பறக்கவிட மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.

நேற்றைய பேரணிக்கு முன், கூட்டத்தின் காட்சிகளை படம் பிடிக்க சிலர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் ட்ரோன் பயன்படுத்துவதை போலீஸார் கண்டதாக உள்ளூர் போலீஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பாரத் படேல் தெரிவித்தார். அவர், "இந்த மூன்று உள்ளூர் மனிதர்களும் தங்கள் தனிப்பட்ட நோக்கத்திற்காக கூட்டத்தின் காட்சிகளை கைப்பற்றினர். நாங்கள் அவர்களை கைது செய்து ஐபிசி பிரிவு 188ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in