கஞ்சா வாங்கியது மோப்ப நாய்க்கு; என்ஜாய் பண்ணியது காவலர்கள்: அதிரடி காட்டினார் எஸ்பி

கஞ்சா வாங்கியது மோப்ப நாய்க்கு; என்ஜாய் பண்ணியது காவலர்கள்: அதிரடி காட்டினார் எஸ்பி

கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், மோப்ப நாய் பயிற்சிக்காக அரசு சார்பில் வழங்கப்பட்ட கஞ்சாவை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறி புதுக்கோட்டையில் ஆயுதப்படை காவலர்கள் மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை காவல்துறையில் பணியாற்றி வருபவர்கள் அஸ்வந்த், சேவியர் ஜான், மற்றும் பழனிச்சாமி. இவர்கள் மோப்பநாய் பிரிவிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள், மோப்ப நாய் பிரிவு, ஆயுதப்படை பிரிவு ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது மோப்பநாய் பிரிவில் மேற்கொண்ட ஆய்வில் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மோப்பநாய் பயிற்சிக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட 180 கிராம் கஞ்சா காணாமல் போய் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். கஞ்சா இருப்பில் இல்லையே தவிர கணக்குப்பதிவேட்டில் இருப்பு காண்பிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அஸ்வந்த், சேவியர் ஜான் மற்றும் பழனிச்சாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட 180 கிராம் கஞ்சாவை பணியின்போது அவ்வபோது எடுத்து பயன்படுத்தி விட்டதாக அவர்கள் உண்மையை ஒப்புக்கொண்டனர். மேலும் பல்வேறு கஞ்சா வியாபாரிகளுடன் இந்த மூன்று பேரும் தொடர்பில் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உத்தரவிட்டார். தற்போது அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் புதுக்கோட்டை காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in