சென்னையில் மூன்றரை வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்: ரயில்வே காவலர் மீது பாய்ந்தது போக்சோ

சென்னையில் மூன்றரை வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்: ரயில்வே காவலர் மீது பாய்ந்தது போக்சோ

சென்னையில் பெண் காவலரின் மூன்றரை வயது மகளிடம் தவறாக நடந்து கொண்ட ரயில்வே காவலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் ரயில்வே காவலர், தனது குடும்பத்துடன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்றரை வயதில் மகள் உள்ளார். இவருக்கும், இவரது கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 4 மாதங்களாக பெண் காவலர் கணவரைப் பிரிந்து தனது மகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 21-ம் தேதி முதல் பெண் காவலரின் மூன்றரை வயது மகளுக்குத் தொடர்ச்சியாக வாந்தி மற்றும் வயிற்றுபோக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் காவலர் சேர்த்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் வசிக்கும் ரயில்வே காவலர் பார்த்திபன் தன்னிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய். இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில், போலீஸார் விசாரணை நடத்தி ரயில்வே காவலர் பார்த்திபன்(33) மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பார்த்திபனிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண் காவலரின் மகளிடம் தவறாக நடந்து கொண்ட சக காவலர் பார்த்திபனுக்கும் ,பெண் காவலருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்றரை வயது சிறுமிக்கு ரயில்வே காவலரால் நிகழ்ந்த கொடூரச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in