மூதாட்டியை பராமரிப்பதில் தகராறு... உறவினர் கைது!

மூதாட்டியை பராமரிப்பதில் தகராறு... உறவினர் கைது!

உறவுக்கார மூதாட்டியை பராமரிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை தெப்பக்குளம் சிஎம்ஆர் ரோட்டை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் சூரியகுமார் (31). காமராஜர் சாலை கான்பாளையம் முதல் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (55). உறவினர்களான இவர்களுக்குள், மூதாட்டி ஒருவரை பராமரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று சூரியகுமாரை, ஆபாசமாக பேசி பாஸ்கர் மிரட்டி உள்ளார்.

இது குறித்து சூர்யபிரகாஷ் தெப்பக்குளம் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மிரட்டல் விடுத்த உறவினர் பாஸ்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in