ஹலோ முகேஷ் அம்பானியா?: தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபரால் பரபரப்பு

ஹலோ முகேஷ் அம்பானியா?: தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபரால் பரபரப்பு

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை கிர்கானில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனைக்கு தொலைபேசி மூலம் ஒரு நபர் இன்று தொடர்பு கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்தினர் மும்பை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் அந்த தொலைபேசி எண்ணைக் கொண்டு விசாரணை நடத்தினர். அப்சல் என்பவர் அந்த எண்ணில் இருந்து நான்கு முறை போனில் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அப்சல், மனநிலை சரியில்லாதவர் என்று தெரிய வந்தது. அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in