திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் திடீரென திரண்ட பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் திடீரென திரண்ட பக்தர்கள்

சனிப்பெயர்ச்சியையொட்டி புதுவை மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று மாலை 6.04 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். அதனையொட்டி சனி பகவானை தரிசிப்பதற்காக இன்று அதிகாலையில் இருந்தே  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். திருநள்ளாறு முழுவதும்  பக்தர்களின் வாகனங்களால் திணறி வருகிறது. 

ஆனாலும், கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சியோ சிறப்பு பூஜைகளோ கிடையாது  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் சார்பில் கோயில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோயில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் இதுகுறித்து காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், “திருநள்ளாறு கோயில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில் சனி பெயர்ச்சியானது வரும் (மார்கழி மாதம்) டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் இன்று சனிப்பெயர்ச்சி  என்பதை ஜோசியர்களும், சில பத்திரிகைகளும் வெளியிட்டுள்ள தகவல்களை வைத்து பக்தர்கள் திரண்டு வந்து சனி பகவானைத் தரிசித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in