வீடுகளை குறிவைத்து பழைய செருப்புகள் திருட்டு; பாலிஷ் போட்டு பல்லாவரம் சந்தையில் விற்பனை: மூவர் கைது

பழைய காலணிகளை திருடும் சிசிடிவி காட்சி
பழைய காலணிகளை திருடும் சிசிடிவி காட்சி பழைய காலணிகளை திருடி சந்தையில் விற்பனை; மூவர் கைது

தாம்பரம் அருகே பழைய காலணிகளை திருடி பல்லாவரம் சந்தையில் விற்ற வடமாநிலத்தவர்கள் உட்பட மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 300 ஜோடி செருப்புகளை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து காலணிகள் காணாமல் போய் உள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அப்பகுதியில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்துள்ளனர். அப்போது அரை நிர்வாணத்தில் படிக்கட்டுகளில் தவிழ்ந்து வரும் நபர் ஒருவர் வீட்டின் வெளியே உள்ள  காலணிகளை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளி வைத்து மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் கேம்ப்ரோடு பகுதியில் உள்ள கேக் கடையில் வேலை பார்த்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த விகாஸ் குமார்,ரோஹித் குமார் மற்றும் உடைந்தையாக இருந்த அருள் எப்ரின் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரனையில் காலணிகளை திருடி காலணிக்கு பாலீஸ் போட்டு பல்லாவரம் வார சந்தையில் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

அவர்களிடமிருந்து 300 ஜோடி காலணிகளை பறிமுதல் செய்த போலீஸார், மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in