இந்த சீசன் பிக்பாஸ் கொஞ்சம் வித்தியாசம் தான்: பொதுமக்களும் பங்கேற்க அழைப்பு

இந்த சீசன் பிக்பாஸ் கொஞ்சம் வித்தியாசம் தான்: பொதுமக்களும் பங்கேற்க  அழைப்பு

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 தொடங்க உள்ளது. இதில் பொதுமக்களும் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொகுப்பாளர் ராஜு
தொகுப்பாளர் ராஜு

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நேயர்கள் மத்தியில் புகழ்பெற்றது. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக களமிறங்கிய இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் 100 நாட்கள் ஒரே இடத்தில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்குப் போட்டி நடத்தப்படும். இதில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். முதல் பரிசாக 50 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது. முதல் சீசன் தொடங்கியதில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு பெருத்த வரவேற்பு ஏற்படுத்ததால் தொடர்ந்து 5 சீசன்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தற்போது பிக்பாஸ் 6 வது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அக்டோபர் மாத தொடக்கத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் போட்டியாளர்களாக யார் பங்கேற்பார்கள் என்ற செய்திகள் பல வாரங்களாக கசிந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் தொகுப்பாளர் ராஜு பேசியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மக்களாகிய நீங்கள் பங்கேற்க ஒரு அரிய வாய்ப்பு. அதில் பங்கேற்பதற்காக காரணத்தை சொல்லி பதிவிடச்சொல்லி இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த சீசனில் போட்டியாளராக பொதுமக்கள் களமிறங்க உள்ளதால் நிகழ்ச்சிக்கு எதிர்பார்ப்பு தற்போது கூடியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in