சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: காரணத்தை அறிவித்த பள்ளிக் கல்வித்துறை!

சனிக்கிழமை பள்ளி, கல்லூரிகள் இயங்கும்: காரணத்தை அறிவித்த பள்ளிக் கல்வித்துறை!

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை கடந்த மாதம் அக்டோபர் 24-ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. தீபாவளிக்குப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகச் சென்னை மற்றும் நகர்ப்புறத்தில் உள்ளவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அடுத்த நாளான 25-ம் தேதி அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்புவதில் கடும் சிரமம் நீடித்தது. இந்நிலையில் மாணவர்களைப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்ப முடியாத காரணத்தால், ஆசிரியர்கள் சங்கம் மற்றும் பல்வேறு தரப்பினர் 25-ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அந்த கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு 25-ம் தேதி விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் 25-ம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 19-ம் தேதி சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in