பெண்குழந்தை பிறந்தால் கட்டணம் தள்ளுபடி - கேக் வெட்டி கொண்டாட்டம்: அசத்தும் புனே மருத்துவர்!

பெண்குழந்தை பிறந்தால் கட்டணம் தள்ளுபடி - கேக் வெட்டி கொண்டாட்டம்: அசத்தும் புனே மருத்துவர்!

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த ஒரு மருத்துவர், தனது மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தால் கட்டணத்தை முழுமையாக தள்ளுபடி செய்வது மட்டுமல்லாமல், அந்தக் குழந்தைக்கு கேக் வெட்டி கொண்டாடி உற்சாகமான வரவேற்பையும் அளிக்கிறார்

புனேவில் உள்ள ஹடாப்சர் பகுதியில் மகப்பேறு மற்றும் சிறப்பு மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் கணேஷ் ராக், பெண் சிசுக்கொலைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த 11 ஆண்டுகளில் இவரது மருத்துவமனையில் 2,400க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் கட்டணம் வசூலிக்காமல் பிறந்துள்ளன.

2012 ம் ஆண்டு தனது மருத்துவமனையில் தொடங்கிய இந்த சிறிய முயற்சி தற்போது பல்வேறு மாநிலங்களிலும், சில ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவியுள்ளது என்கிறார் கணேஷ் ராக். அவர், "2012க்கு முன், மருத்துவமனை தொடங்கிய ஆரம்ப ஆண்டுகளில், சில சமயங்களில் பெண் குழந்தை பிறந்தால், குடும்ப உறுப்பினர்கள் அக்குழந்தையைப் பார்க்க வராமல் வெட்கப்படும் விதமான அனுபவங்களை இங்கு சந்தித்தோம். அந்தக் காட்சி என்னைத் தாக்கி, மனதை நெகிழச் செய்தது. பெண் குழந்தையைக் காப்பாற்றவும், பாலின சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏதாவது செய்யவேண்டும் என்று மனதில் தோன்றியது" என அப்போது பிறந்த பெண் குழந்தையைக் கைகளில் பிடித்தபடி மருத்துவர் கணேஷ் ராக் கூறினார்.

மேலும், “ஆண் குழந்தை பிறந்தால், சில குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் மருத்துவமனைக்கு வந்து கட்டணத்தை செலுத்துவார்கள். ஆனால் பெண் குழந்தையாக இருந்தால், சில சமயங்களில் அலட்சியம் செய்வார். இதற்காக, ஒரு பெண் குழந்தை பிறந்தால், முழு மருத்துவ கட்டணத்தையும் தள்ளுபடி செய்ய முடிவு செய்தோம். கடந்த 11 ஆண்டுகளில், நாங்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் 2,400 க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளோம்" என்றார்.

அரசாங்க கணக்கெடுப்பின்படி, கடந்த 10 ஆண்டுகளில் 6 கோடிக்கும் அதிகமான பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளதாகவும், இது ஒரு வகையான "இனப்படுகொலை" என்றும் அதிர்ச்சி புள்ளி விவரத்தை மருத்துவர் ராக் கூறினார்.

தொடர்ந்து பேசும் அவர், “பெண் சிசுக்கொலைக்குக் காரணம், ஆண் குழந்தை மீதான மக்களின் விருப்பமே. இது ஒரு பிராந்தியம், மாநிலம் அல்லது ஒரு நாட்டிற்கு மட்டுமில்லை, இது உலகளாவிய சமூக பிரச்சினை. எங்கள் கணக்கெடுப்பின்படி, இப்போது பெண் சிசுக்கொலை வழக்குகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது, இது ஒரு நேர்மறையான நடவடிக்கையாகும்" என்று கூறினார்.

கடந்த மாதம் ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையான வசீம் பதான் பேசும்போது, “அக்டோபர் 26 அன்று, எங்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையின் கொள்கையின்படி, பெண் குழந்தையின் மருத்துவ செலவுக்கான முழு கட்டணமும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும்

எனது மனைவி மற்றும் குழந்தைகளை டிஸ்சார்ஜ் செய்யும் நேரத்தில் மருத்துவமனையின் லாபியை பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரித்து, கேக் வெட்டி பெண் குழந்தைக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர், என் குழந்தைகள் மீது மலர்களை பொழிந்தனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in