பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்!

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் இவர் தான்!

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முதலில் 21 பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். தற்போது ஏழு பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர். இதில் அமுதவாணன் நேரடியாக ஃபைனலுக்குச் சென்றுள்ளார். அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, ஏடிகே என ஆறு பேர் இந்த வார நாமினேஷனில் உள்ளனர். இதில் வழக்கம் போல் அசீம் மற்றும் விக்ரமன் அதிகமான வாக்குகளைப் பெற்று அடுத்தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்து மூன்று மற்றும் நான்காவது இடங்களை ஷிவின், கதிரவன் பிடித்துள்ளனர். இந்த நிலையில், மைனா, ஏடிகே குறைவான வாக்குகளைப் பெற்று கடைசி இடங்களில் உள்ளனர். இவர்களில் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளனர். அதிலும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஏடிகே கடைசி இடத்தில் உள்ளதால், அவர் தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் போட்டியில் உள்ள ஆறு பேரில் இருந்து ஒருவர் தான் இந்த பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராகப் போகிறார். குறிப்பாக அசீம், விக்ரமன் இருவரில் ஒருவரே பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in