‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கவிருக்கும் தேர்தல் இது!’

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
‘அடுத்த 25 ஆண்டுகளுக்கு உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கவிருக்கும் தேர்தல் இது!’

நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த 25 ஆண்டுகளுக்கு குஜராத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல் எனப் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

மொத்தம் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு, டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது.

இந்தத் தேர்தலில் பிரதமரும், குஜராத் முன்னாள் முதல்வருமான மோடி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கவிருக்கும் பனாஸ்காந்தா மாவட்டத்தில் இன்று அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அம்மாவட்டத்தின் பாலன்பூரில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, “இங்கு யார் எம்எல்ஏ-வாக வருவார், யாருடைய ஆட்சி அமையும் என்பதற்கான தேர்தல் அல்ல இது. குஜராத்தின் அடுத்த 25 ஆண்டுகாலத் தலைவிதியைத் தீர்மானிக்கும் தேர்தல்” என்றார்.

மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் பாஜக, ஏராளமான வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதாகக் கூறிய மோடி, “குஜராத் மாநிலம் ஒரு மாபெரும் பாய்ச்சலை நிகழ்த்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு வலிமையான அரசை உருவாக்க உங்கள் ஆதரவு எனக்குத் தேவை. நீங்கள் உங்கள் பிரச்சினைகளை என்னிடம் சொல்ல வேண்டியதே இல்லை. ஏனெனில், நான் இங்குதான் வளர்ந்தேன். அந்தப் பிரச்சினைகள் எனக்கு நன்றாகவே தெரியும். குறைந்த கால அவகாசத்தில், தண்ணீர்ப் பற்றாக்குறை மற்றும் மின்சாரப் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை நம்மால் தீர்க்க முடிந்தது. சில தசாப்தங்களுக்கு முன்னர் இங்கு நிலவிய மோசமான சூழல் குறித்து, இன்றைய இளைஞர்கள் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in