`அறநிலையத்துறை இடங்கள் மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டங்கள் தேவை'- திருவடிக்குடில் சுவாமிகள்

மாநாட்டில் உரையாற்றும் திருவடிக்குடில் சுவாமிகள்
மாநாட்டில் உரையாற்றும் திருவடிக்குடில் சுவாமிகள்

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மற்றும் இடங்களைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும் என்று திருவடிக்குடில் சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார். 

திருப்பூரில் நேற்று இரவு எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய கொங்கு மண்டல மாநாட்டில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி  திருக்கூட்டத்தின் நிறுவனர்  திருவடிக்குடில் சுவாமிகள் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, ``தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடினால் வருவாய் வெளிமாநிலங்களுக்குச் சென்று விடும் என்று சொல்லும் அரசு, இங்குள்ள பக்தர்கள் சபரிமலைக்கும் திருப்பதிக்கும் செல்வதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.

திருப்பதியில் செய்து கொடுக்கப்படும் அடிப்படை வசதிகளையும் அதனால், அந்த மாநிலம் ஈட்டும் வருவாய், அதன் மூலம் நடத்தப்படும் தொழில் முனைவு, மக்கள் சேவை மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும் ஏன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இது வெட்கக் கேடல்லவா?

ஆனால் இங்குள்ள பல கோயில்களில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட சரியாக இல்லை. முதலில் அவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும். அதன் மூலம் பக்தர்கள் வெளி மாநில கோயில்களுக்கு செல்வதை குறைக்க இயலும். 

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் மற்றும் பொருளாதாரத்தைக் கொண்டு புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி ஆக்கபூர்வமான மக்கள் பணிகளைச் செய்ய முடியும். அதனை தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு செய்து தர வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in