திருவண்ணாமலை: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

திருவண்ணாமலை: 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது!

கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அண்ணாமலையாருக்கு அரோகரா என விண்ணைப் பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் முழக்கமிட்டனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தனர். கடந்த 28-ம் தேதி வெள்ளி தேரோட்டமும், 29-ம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவான பரணி தீபம் இன்று மாலை ஏற்றப்பட்டது. 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதற்காக தீபா கொப்பரை தலைச்சுமையாக நேற்று எடுத்துச் செல்லப்பட்டது. 200 கிலோ செப்பினால் ஆன பிரம்மாண்ட கொப்பரையில் மூன்றரை டன் நெய், ஆயிரம் மீட்டர் துணியில் சுற்றிய திரி ஆகியவை மலை மீது கொண்டு செல்லப்பட்டன. தீப திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in