'மேன்டூஸ்' புயலிலும் எரியும் திருவண்ணாமலை தீபம்: பக்தர்கள் பரவசம்

'மேன்டூஸ்' புயலிலும் எரியும் திருவண்ணாமலை தீபம்: பக்தர்கள் பரவசம்

'மேன்டூஸ்' புயல் காரணமாக வடகிழக்கு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து எரிந்து வருவதால் பக்தர்கள் பக்தி பரவசமடைந்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று திருவண்ணாமலை மலை உச்சியில் அண்ணாமலையாருக்குத் தீபமேற்றி வழிபடுவது வழக்கம். மகாதீபம் ஏற்றப்படும் நன்னாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வண்ணம் இருப்பார்கள். கடந்த 6-ம் தேதி கார்த்திகை தீபமும், 7-ம் தேதி பவுர்ணமி விழாவும் கொண்டாடப்பட்ட நிலையில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் சென்று அண்ணாமலையாரைத் தரிசனம் செய்தார்கள்.

கார்த்திகை தீபத்திருவிழாவான கடந்த 6-ம் தேதி மாலை 2668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகாதீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும். இந்நிலையில், நான்காம் நாளான இன்று 'மேன்டூஸ்' புயல் காரணமாகத் திருவண்ணாமலை பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் இன்றும் மலை உச்சியில் மகா தீபம் சுடர் விட்டு எரிந்து வருகிறது. இதை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசித்து வருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in