திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் ஹரியானாவில் கைது: விமானத்தில் சென்னை அழைத்து வரும் போலீஸ்!

ஹரியானாவில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்
ஹரியானாவில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் ஹரியானாவில் கைது: விமானத்தில் சென்னை அழைத்து வரும் போலீஸ்!

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் தலைவன் உள்பட 2 பேரை ஹரியானாவில் தமிழக காவல்துறையை சேர்ந்த தனிப்படையினர் கைது செய்துள்ளனர். கொள்ளையர்களை தனி விமானத்தில் காவல்துறையினர் சென்னை அழைத்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ம் அதிகாலை நான்கு இடங்களில் உள்ள ஏடிஎம்களில் ஒரே நேரத்தில் கொள்ளை நடந்தது. திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை மாரியம்மன் கோயில் தெரு, தேனிமலை பகுதி, போளூர் பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம், கலசபாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அமைந்துள்ள ஒன் இந்தியா ஏடிஎம் ஆகிய இடங்களில் கொள்ளை அரங்கேறியது. அனைத்து இடங்களிலும் பணம் கொள்ளை போனதுடன், இயந்திரங்களும் எரிந்து போயிருந்தன. இந்த ஏடிஎம்களில் 70 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த ஏடிஎம் மையங்களில் இருந்து புகை வெளியேறியதைப் பார்த்தே பொதுமக்களுக்கு இது குறித்து தகவல் தெரிந்தது. அதன் பிறகு அவர்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ஏடிஎம்களில் கொள்ளை நடந்தது காவல்துறையினரை அதிர்ச்சியடைய வைத்தது. இது தொடர்பாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் என்று காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்தக் கொள்ளையில் தொடர்புடைய 10 பேரைக் கர்நாடகா, குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மற்றும் ஹரியானா மாநிலங்களில் முகாமிட்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இதில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான சிறப்புக் காவல் படையினர் ஹரியானா மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர். வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான சிறப்புக் காவல் படையினர் குஜராத் மாநிலத்திலும், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்பு படையினர் கர்நாடகத்தின் கோளார் பகுதியிலும் முகாமிட்டு சோதனை செய்து வருகின்றனர்.

கொள்ளை நடந்த ஏடிஎம்
கொள்ளை நடந்த ஏடிஎம்

இந்த விசாரணையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் இந்த ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் என்பது காவல்துறையினருக்கு உறுதியாகத் தெரியவந்துள்ளது. இந்த தகவலை வைத்துத்தான் ஒவ்வொரு பகுதியிலும் தனிப்படையினர் முகாமிட்டிருந்தனர். இந்த நிலையில் அரியானாவில் கொள்ளை கும்பல் தலைன் ஆரிப், ஆசாத் ஆகியோரை தனிப்படையினர் இன்று கைது செய்துள்ளனர். அவர்களை விமானத்தில் தனிப்படையினர் அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பது விசாரணைக்கு பிறகு தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in