திருவள்ளுவர் தினத்தில் படுஜோராக நடந்த மது விற்பனை: 60 வழக்குப்பதிவு, 66 பேர் கைது!

திருவள்ளுவர் தினத்தில் படுஜோராக நடந்த மது விற்பனை: 60 வழக்குப்பதிவு, 66 பேர் கைது!

திருவள்ளுவர் தினத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை தொடர்பாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் உதவி கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டிருந்தார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனை குறித்து தனிக்கவனம் செலுத்தியதன்பேரில் நேற்று ஒரே நாளில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக 60 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 644 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு 8,400 ரூபாய் கைப்பற்றப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in