திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

திருவள்ளூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாகத் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் அடுத்துள்ள கீழச்சேரியில் உள்ள சாக்ரீட் ஹார்ட் என்னும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துகொண்டுள்ளார். பள்ளிக்குச் சொந்தமான விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அங்கு விரைந்த காவல்துறையினர் மாணவியின் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்தது குறித்து பள்ளி நிர்வாகம் பெற்றோருக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என மாணவியின் உறவினர்கள் தெக்கலூர் பகுதியில் பேருந்துகளை சிறைபிடித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பள்ளியிலும், மாணவியின் சொந்த கிராமத்திலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கல்யாண், “பள்ளியிலோ, விடுதியிலோ மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டால் அந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாங்கள் புகார் வாங்குவதற்காக வந்திருக்கிறோம். மாணவியின் பெற்றோர்களிடம் புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்வோம். அதன்பிறகு சிபிசிஐடி வசம் வழக்கை ஒப்படைப்போம். உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின் படி இந்த வழக்கை சிபிசிஐடியினர் விசாரணை செய்வார்கள்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in