திருச்சூர் பூரம் திருவிழா... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சூர் பூரம் திருவிழா... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருச்சூர் பூரம் திருவிழா வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், ​​பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், யானைகளுக்கும் கூட்டத்துக்கும் இடையே 6 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக யானைகளுக்கும், பொதுமக்களுக்குமிடையே குறைந்தது 50 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார் மற்றும் பி.கோபிநாத் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச் முன்பு, இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது யானைகளை பூரம்திருவிழாவிற்கு அழைத்து வரும் போது தீப்பந்தங்கள் எடுத்து வருவது, செண்ட மேளம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவின் சுட்டெரிக்கும் வெப்பநிலையை கருத்தில் கொண்டு, இதுபோன்ற சூழ்நிலைகளில் யானைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான இடைவெளியை பராமரிக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது. வழிபாட்டுத் தலங்களில் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக யானைகளை அணிவகுத்துச் செல்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்து, தலைமை வனவிலங்கு காப்பாளர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டது.

தற்போது பூரம் திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திருத்தப்பட்ட உத்தரவில், ஊர்வலத்தின் போது யானைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், யானைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான தூரம் குறைந்தப்பட்சமாக 6 மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அணிவகுப்பில் கலந்து கொள்ளும் யானைகளின் உடல்திறன் பரிசோதனை அறிக்கை முன்னதாக சமர்பிக்கப்பட வேண்டும் எனவும், உடல் தகுதி பெறாத யானைகளை அணிவகுப்பில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in