அடிக்கடி மோதல், தொழில் பாதிப்பு: குமரி மீனவர்களுக்கு எதிராக நெல்லை மீனவர்கள் போராட்டம்!

மீனவர்கள் (கோப்பு படம்)
மீனவர்கள் (கோப்பு படம்)அடிக்கடி மோதல், தொழில் பாதிப்பு: குமரி மீனவர்களுக்கு எதிராக நெல்லை மீனவர்கள் போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு எதிராக நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 7 கிராம மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லாமல் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களில் பலரும் விசைப்படகு மூலம் மீன்பிடித் தொழில் செய்துவருகின்றனர். நெல்லை மாவட்டத்தின் கூடங்குளம், இடிந்தகரை சுற்றுவட்டார மீனவர்கள் பலரும் பாரம்பர்ய முறையில் நாட்டுப்படகில் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்ட மீனவர்கள், நெல்லை மாவட்ட கடல்பகுதியில் விசைப்படகில் மீன்பிடிக்க வருவதால் தங்களது மீன்பிடி வலை, உபகரணங்கள், நாட்டுப்படகு ஆகியவை தொடர்ந்து சேதம் ஆகிவருவதாக நெல்லை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1-ம் தேதி குமரி மாவட்ட மீனவர்களின் விசைப்படகு மோதியதில் இடிந்தகரையைச் சேர்ந்த நாட்டுப்படகு சேதம் ஆனதாகவும், இரு மீனவர்கள் காயம் அடைந்ததாகவும் புகார் தெரிவித்தனர். நெல்லை மீனவர் மீது மோதிய விசைப்படகின் லைசன்ஸை ரத்து செய்ய வேண்டும், சேதமான பொருள்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும், மோதியவர்களைக் கைது செய்ய வேண்டும் என கடந்த 3-ம் தேதி முதலே இடிந்தகரை பகுதி மீனவர்கள் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு ஆதரவாக கூடுதாழை, கூத்தன்குழி, உவரி, கூடங்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஏழு கிராம மீனவர்கள் இன்று கடல் தொழிலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே குமரி, நெல்லை மீனவர்கள் இடையே இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in