ஆபீசில் புகுந்து தொண்டு நிறுவன உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

ஆபீசில் புகுந்து தொண்டு நிறுவன உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

திருச்செந்தூர் அருகே தொண்டு நிறுவன உரிமையாளரை 10 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி அனைவரையும் பதை பதைக்க வைத்திருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்தவர் பாலகுமரேசன். இவர் ஆதவா என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலையில் பால்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஆறுமுகநேரி பகுதியில் கஞ்சா, போதைப் பொருள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும் இதனை தடுக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பொதுமக்களை திரட்டி அண்மையில் சாலை மறியல் செய்தார்.

இந்த நிலையில் தனது பால் பண்ணை அலுவலகத்தில் பலகுமரேசன் நேற்று இரவு இருந்த போது அங்கு வந்த 10 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த பாலகுமரேசன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கும்பலை தேடி வருகின்றனர். இந்த நிலையில் பாலகுமரேசனை கும்பல்கள் அரிவாளால் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி அனைவரையும் பதற வைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in