அடுத்தடுத்து ஆறு கடைகளில் கைவரிசை காட்டிய மர்ம நபர்: திறக்கவந்த உரிமையாளர்கள் அதிர்ச்சி

திருடப்பட்ட கடைகள்
திருடப்பட்ட கடைகள்

கம்பம் பகுதியில் உள்ள கடைகளில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திருட்டில் ஈடுபட்ட நபரின் உருவம் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் பெட்டிக் கடைகள், ஜவுளிக் கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலையில் அப்பகுதியில் உள்ள கடைகளை திறப்பதற்கு கடையின் உரிமையாளர்கள் வந்தனர். அப்போது, அப்பகுதியில் உள்ள ஆறு கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்..

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கம்பம் வடக்கு காவல்துறையினர் நேரில் வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இக்கடைகளில், ரூ. 25 ஆயிரம் மதிப்பிலான உடைகள், ரொக்கம் ரூ. 3 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. செல்போன், பர்னிச்சர் கடைகளின் பூட்டை மட்டும் உடைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது.

இதுகுறித்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை இன்று ஆய்வு செய்தனர். அதில், திருடும் நபரின் உருவம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் சிசிடிவி பதிவுகள் மற்றும் தடயங்களைக் கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in