ஓட்டைப் பிரித்து வீட்டில் குதித்த திருடன்... நள்ளிரவில் அலறிய பெண்: மதுரையில் நடந்த திகில் சம்பவம்!

ஓட்டைப் பிரித்து வீட்டில் குதித்த திருடன்... நள்ளிரவில் அலறிய பெண்: மதுரையில் நடந்த திகில் சம்பவம்!

நள்ளிரவில் வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வீட்டின் உரிமையாளர் மீது குதித்து கொள்ளையன் மாட்டிக்கொண்ட சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது.

மதுரை மதிச்சியம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அதே பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு தன்னுடைய மகனுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்ளே இறங்கிய கொள்ளையன், நிலைதடுமாறி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் சண்முக சுந்தரி மற்றும் அவருடைய மகன் மாதேஸ் மீது குதித்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த இருவரும் கொள்ளையனை உடனடியாக பிடித்தனர். தொடர்ந்து, மதிச்சியம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளையன் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும் வீட்டில் உள்ள பொருட்களை திருடுவதற்காக ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியதும் தெரியவந்தது. மேலும், இவருடைய கூட்டாளிகளான 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in