கொள்ளையடிக்க வந்த வீட்டில் குளித்து சாமி கும்பிட்டு தற்கொலை செய்த திருடன்: போலீஸார் அதிர்ச்சி

கொள்ளையடிக்க வந்த வீட்டில் குளித்து சாமி கும்பிட்டு தற்கொலை செய்த திருடன்:  போலீஸார் அதிர்ச்சி

தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருடன், குளித்து சாமி கும்பித்து விட்டு திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு இந்தியா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஷ்ராமி. தொழிலதிபரான இவர் கடந்த வாரம் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார். நேற்று அவர் வீடு திரும்பிய போது ஒருவர் வீட்டினுள் தூக்கில் தற்கொலை செய்து கொண்டிருப்பதை பார்த்து ஐஷ்ராமி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், தூக்கில் தொங்கியவரை இறக்கி விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்தவர் அசாமைச் சேர்ந்த திலீப் குமார் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகளும் இருப்பது தெரிய வந்தது.

மேலும் தொழிலதிபர் வீட்டில் திருட வந்த திலீப் குமார், அங்கேயே குளித்து சாமி கும்பிட்டு விட்டு பிறகு தற்கொலை செய்தது தெரிய வந்தது. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட வந்த இடத்தில் திருடன் தற்கொலை செய்த சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in