மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் உதவி ஆய்வாளர் திடீர் தற்கொலை

மருத்துவ விடுப்பு முடிந்த நிலையில் உதவி ஆய்வாளர் திடீர் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த முருகன், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். உடல் நலம் பாதிப்பு காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக  முருகன் மருத்துவ விடுப்பில் இருந்து வந்திருக்கிறார்.  மருத்துவ விடுப்பு முடிந்த நிலையிலும் கூட அவர்  மீண்டும் பணிக்கு திரும்ப வில்லையாம். 

இந்த நிலையில் நேற்றிரவு  முருகன் திண்டிவனத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடல் நல பாதிப்பு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இது குறித்து திண்டிவனம் போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in