'மனரீதியாக என்னைத் துன்புறுத்தினார்கள்’: ராகிங் கொடுமையால் கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி எடுத்த துயர முடிவு

'மனரீதியாக என்னைத் துன்புறுத்தினார்கள்’: ராகிங் கொடுமையால்  கடிதம் எழுதி வைத்து விட்டு கல்லூரி மாணவி எடுத்த துயர முடிவு

ஒடிசா மாநிலத்தில் சக மாணவிகளின் ராகிங்கால் பாதிக்கப்பட்ட முதலாம் ஆண்டு கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் ருச்சிகா மொஹந்தி(19). இவர் கல்லூரி விடுதியில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த படகடா போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ருச்சிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன் பின் மாணவி தங்கியிருந்த அறையை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. அதில் தன்னுடன் படிக்கும் சீனியர் மாணவிகள் மூன்று பேர் தொடர்ந்து தன்னை ராகிங் செய்தனர் என்றும், மனரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளானதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவர் யாருடைய பெயரையும் கடிதத்தில் குறிப்பிடவில்லை.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், "கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவம் குறித்து எனக்குத் தெரியாது. மாணவி அப்படி யார் மீதும், எந்த புகாரும் தெரிவிக்கவில்லை" என்றும் கூறினார். இந்த நிலையில், தற்கொலை செய்து கொண்ட ருச்சிகாவின் தாயார் புவனேஸ்வரில் உள்ள படகடா காவல்நிலையத்தில் தன் மகளின் தற்கொலைக்குக் காரணமான மூன்று பேரை கைது செய்ய வேண்டும் என்று புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராகிங்கால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டது ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in