சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை

10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குத் தடை
10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குத் தடைசென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் இனி இவர்களுக்கு அனுமதி இல்லை
Updated on
1 min read

சென்னை மாநகராட்சி நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பெரியமேடு மை லேடீஸ் பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் 7 வயது சிறுவன் பயிற்சியின்போது நீரில் மூழ்கி சிறுவன் பலியானார். இதனைத் தொடர்ந்து, இந்த நீச்சல் குளத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு நிர்வாக ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், பல்வேறு விதிகளையும் சென்னை மாநகராட்சி விதித்துள்ளது.

அதன்படி, சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளங்களில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களை அனுமதிக்க கூடாது. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை நீச்சல் தெரிந்த பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் துணை இல்லாமல் அனுமதிக்க கூடாது.நீச்சல் தெரியாதவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. 3.5 அடி ஆழத்திற்கு மேல் உள்ள நீச்சல் குளங்களில், 4 அடி உயரம் குறைவாக உள்ள சிறுவர்களுக்கு அனுமதி இல்லை. நீச்சல் குளங்களில் டைவ் அடிப்பது போன்ற சாகசங்கள் செய்ய அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறைகளை முறையாக கண்காணிக்காத ஒப்பந்ததாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in