
"இன்னும் 6 மாதங்களில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படும்" என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் மத்திய அரசு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டருடன் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் சி.கே.சிங் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மத்திய அரசின் திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் பாஜகவை வலுப்படுத்த அனைவரும் கடுமையாக உழைத்து வருகிறோம்" என்றார்.
சுங்க கட்டணம் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா எந்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சிங், 6 மாதங்களில் சுங்கச்சாவடிகள் இல்லாமல் கேமராக்கள் மூலம் கட்டணம் வசூலிக்கப்படும். கேமராக்கள் மூலம் கார், வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் பிடித்தம் செய்யப்படும்" என்றார்.