மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் நடக்கவில்லை: மறுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்!

மின்மாற்றி
மின்மாற்றிமின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் நடக்கவில்லை: மறுக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம்!

மின்மாற்றி கொள்முதல் செய்ததில் எந்த முறைகேடு நடக்கவில்லை என்று தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 397 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்துள்ளதாக அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், மின்வாரியத்தில் மின்மாற்றி வாங்கியதில் 397 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியம் இதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

மின்மாற்றிகள் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும், சென்னையில் இருந்து நாகர்கோவில் வரை உள்ள 44 மின் பகிர்மான வட்டங்களுக்கு மின்மாற்றிகளை எடுத்து சென்று வழங்குவதால், அவை சரக்கு வாகன கட்டணம் செலுத்த வேண்டி உள்ளது.

மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. 'ஜெம் போர்டல்' விலையை எடுத்துஒப்பீடு செய்துள்ளது சரியான நடைமுறையாகாது. புகாரில் மற்ற மாநிலங்களோடு மின்மாற்றிகளின் கொள்முதலை ஒப்பீடு செய்து ரூ.397.37 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளது.

புகாரில் மின்மாற்றிகளின் வேறுபட்ட விவரக் குறியீடுகளின் அடிப்படையிலும், வேறுபட்ட மூலப்பொருட்களின் அடிப்படையிலும் உதாரணமாக செம்பு மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்யாமல் அலுமினியம் மின்சுருள் கொண்ட மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்துள்ளது.

திமுக அரசு, எந்த நிலையிலும், முறைகேடு நடைபெறுவதை அனுமதிக்காது. ஆகவே, மின்மாற்றிகள் கொள்முதலில் புகாரில் கூறியவாறு எவ்வித முறைகேடுகளும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடைபெறவில்லை. புகாரில் அனைத்து ஒப்பந்த புள்ளிதாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டு உள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மின்மாற்றிகளை விற்பனை செய்து வருகின்றன. கடந்த 2011-ம் ஆண்டு முதல் மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்ட கோப்புகளை பரிசீலனை செய்ததில் பெரும்பாலான நேரங்களில் நிறுவனங்கள் ஒரே விலைப்புள்ளியை சமர்ப்பித்துள்ளது தெரிய வருகிறது.

மின்மாற்றி தயாரிக்கும் நிறுவனங்கள் ஒரே மாதிரி விலைப்புள்ளி கோருவது கடந்த இரண்டு ஆண்டுகளில் நிகழும் நிகழ்வுகள் அல்ல. இந்த நடைமுறை, கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே பின்பற்றப்பட்டு வருகிறது. கேரளாவில் கொள்முதல் செய்யும் மின்மாற்றிகளோடு ஒப்பீடு செய்ய இயலாது. ராஜஸ்தானில் கொள்முதல் செய்யப்படும் மின்மாற்றிகளுக்கான உத்தரவாத காலம் 3 வருடங்கள் ஆகும்.

எனவே, சமநிலையில் உள்ள விவர குறியீடுகளோடுதான் ஒப்பீடு செய்வது பொருத்தமானதாக இருக்கும். தமிழ்நாடு மின்சார வாரியம் கொள்முதல் செய்யும் விலை எந்தவிதத்திலும் அதிகப்படியானதாக இல்லை என்பது தெரிகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் விவரக் குறியீடுகள் மற்ற மாநிலத்தில் பயன்படுத்தப்படும் மின்மாற்றிகளின் விவரக் குறியீடுகளோடு ஒப்பீடு செய்ய இயலாத அளவில் உயர்ந்ததாக உள்ளது. மின்மாற்றியின் விலையை ஒப்பிடும்போது அதற்கு இணையான திறன் உள்ள மின்மாற்றிக்கான விலையுடன் மட்டுமே ஒப்பீடு செய்ய இயலும்.

ஆகவே, புகாரில் ஒப்பீடு செய்துள்ளது தவறானதாகும். கொள்முதலிலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லை"என்று கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in