இரவில் திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்: ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்

இரவில் திடீரென பற்றி எரிந்த அரசு பேருந்து; உயிர் தப்பிய பயணிகள்: ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள்

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் பயணிகளுடன் புறப்பட காத்திருந்த அரசு பேருந்து ஒன்று  திடீரென தீப்பற்றி எரிந்ததால் பயணிகள் பதை பதைத்து  இறங்கி ஓடி  உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம் பேருந்து நிலையத்தில்  நேற்று நள்ளிரவு சீர்காழி பணிமனையை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் மயிலாடுதுறை நோக்கி செல்வதற்காக நின்று கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக ஏறிக் கொண்டிருந்தனர். அப்போது  திடீரென பேருந்தில் மின்கசிவு காரணமாக டீசல் டேங்க் அருகே தீப்பிடித்தது. அது சிறிது நேரத்திலேயே வேகமாக  பரவி பேருந்து முழுவதுமே  எரியத் தொடங்கியது.

இதனால் பேருந்தில்  அமர்ந்திருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு பேருந்தை விட்டு இறங்கி ஓடி உயிர் தப்பினர்.  அதற்குள் பேருந்து முழுமையாக தீ பரவி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்ததும்  சிதம்பரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முழுவதுமாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது. பயணிகள் அனைவரும் இறங்கி விட்டதால்  எந்த ஒரு பயணிக்கும் ஆபத்து இல்லை. பேருந்து திடீரென தீப்பற்றியது எப்படி என  சிதம்பரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in