அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ
நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை: சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே இருப்பது கொள்கைக் கூட்டணி என நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கூறினார்.

அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறாவிட்டால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்மையில் அண்ணாமலை பேசி இருந்தார். அப்போதே அண்ணாமலை சொல்வது அவரது தனிப்பட்டக் கருத்து. அகில இந்திய தலைமை சொல்வதே இறுதி முடிவு எனச் சொல்லியிருந்தார் அக்கட்சியின் சட்டமன்றக்குழுத்தலைவரான நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ.

நெல்லையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வேளாண் பட்ஜெட்டில் குறிப்பிட்ட சில நபர்களுக்கும், சில மாவட்டங்களுக்கும் மட்டும் தான் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் போதிய மழை இல்லை. அதனால் விளைச்சல் இன்றி வறட்சி நிலவுகிறது. எனவே, நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நெல்லை மாவட்டத்தில் முன்பு செயல்பட்டு வந்த நெல் ஆராய்ச்சி மையத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பெரிய கட்சிகளில் ஒன்று அதிமுக. அகில இந்திய அளவில் பெரிய கட்சி பாஜக. உலகளவில் அதிக எம்.பி, எல்.எல்.ஏக்கள் உள்ளக் கட்சி பாஜக தான். அதிமுக, பாஜக இடையே கொள்கை அடிப்படையிலான கூட்டணியே உள்ளது. அதிமுக, பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. கீழ்மட்டத்தில் ஒன்றிரண்டு பேர் அங்கும், இங்குமாக பிரச்சினைகள் செய்கின்றனர். தேர்தல் அறிவிக்கும்போது பிரச்சினைகள் ஏற்படலாம். வேட்பாளர்கள் அறிவிக்கும்போது ஒன்றுபட்டு வேலைசெய்வதில் எந்தக் கருத்து வேறுபாடும் இருக்காது.”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in