செல்போனில் வந்த லிங்க்கை க்ளிக் செய்தார்; 1.6 லட்சத்தை இழந்தார்: இமான் அண்ணாச்சியின் சகோதரர் அதிர்ச்சி

இமான் அண்ணாச்சியின் சகோதரர்  செல்வகுமார்
இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் செல்போனில் வந்த லிங்க்கை க்ளிக் செய்தார்; 1.6 லட்சத்தை இழந்தார்: இமான் அண்ணாச்சியின் சகோதரர் அதிர்ச்சி

நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் வங்கிக் கணக்கிலிருந்து 1.60 லட்சம் நூதனமான முறையில் திருடப்பட்டுள்ளது.

சென்னை அரும்பாக்கம், பாலாம்பாள் தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(44). இவர் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சியின் சகோதரர் ஆவார். இவர் பல்வேறு திரைப்படங்களில் சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். செல்வகுமார் நேற்று அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தனது செல்போனுக்கு குறுந்தகவல் ஒன்று வந்ததாகவும், அதில் தனது கிரெடிட் கார்டில் கூடுதல் பாயின்ட்டுகள் இருப்பதாகவும், இந்த லிங்கை கிளிக் செய்தால் 10 ஆயிரம் பணம் கிடைக்கும் இன்றே கடைசி நாள் என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த ஆப்பை க்ளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்பட்டிருந்த தனது வங்கி விவரங்களை பதிவு செய்த சிறிது நேரத்தில் தனது கிரெடிட் கார்டு மற்றும் மகள்கள் வங்கிக் கணக்கில் இருந்து 1.64 லட்சம் பணத்தை 3 தவணையாக மர்ம நபர்கள் எடுத்துள்ளனர்.

இது குறித்து உடனே வங்கிக்கு தகவல் தெரிவித்ததால் மேலும் பணம் எடுக்காமல் தடுத்து நிறுத்தியதாகவும் மேலும் தான் கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோவை போல் வைத்து நூதன முறையில் பணத்தை பறித்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்தப் புகாரின் பேரில் அண்ணாநகர் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in