தாயின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த மகள்: நடுரோட்டில் வாலிபரால் நடந்த கொடூரம்

தாயின் கண்முன்னே ரத்த வெள்ளத்தில் சரிந்த மகள்: நடுரோட்டில் வாலிபரால் நடந்த கொடூரம்

ஹாரன் அடித்து வழிவிட கேட்ட சிறுமியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா (16). காது கேளாத மாற்றுத்திறனாளியான இவர், தனது தாயுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால் அந்த சிறுமி ஹாரன் அடித்து முன்னால் இருந்த வாகனங்களை வழிவிடும்படி கூறியுள்ளார். அப்போது, முன்னால் வாகனத்தில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், வழிவிட மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சிறுமி, அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென அந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால் சிறுமியை கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சிறுமி உயிரிழந்தார். தாய் முன் முன்னே மகள் கொடூரமாக கொல்லப்பட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதன் பின்னர் அந்த நபரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் அந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நடுரோட்டில் தாயின் கண் முன்னே மகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in