காவல் நிலையத்தில் தந்தை-மகன் கட்டிப்புரண்டு சண்டை; பறிதவித்த தாய்; போதையால் நிகழ்ந்த சோகம்

காவல் நிலையத்தில் தந்தை-மகன் கட்டிப்புரண்டு சண்டை; பறிதவித்த தாய்; போதையால் நிகழ்ந்த சோகம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காவல் நிலையத்திற்குள் புகுந்து காவலர்களை தாக்க முயன்ற போதை ஆசாமி ஒருவர், தேடி வந்த தன் பெற்றோரைக் காவல்நிலையத்திலேயே வைத்து தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காவல் நிலையம் அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அங்கு குடித்துவிட்டு மதுபோதையில் இருந்த வாலிபர்கள் சிலர்நேற்று இரவு, சாலையில் நின்று கொண்டு தகராறில் ஈடுபட்டுவந்தனர். அவர்களில் ஒருவரான மிடாலம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்னும் வாலிபர் மதுபோதையில் அந்த வழியாக வந்தவர்களையும் தாக்கத் தொடங்கினார். இந்தத் தாக்குதலில் காயம் அடைந்த சிலர் அருகில் இருந்த குளச்சல் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்கச் சென்றார்கள்.

அப்போது அவர்கள் பின்னாலேயே ஸ்டேசனுக்கு வந்த ஆனந்த் புகார் கொடுக்க வந்தவர்கள், காவலர்களையும் தாக்கத் தொடங்கினார். இதனால் புகார் கொடுக்க வந்தவர்கள் அங்கிருந்து வெளியேறினர். இதனிடையே ஆனந்த் காவல்நிலையத்தில் புகுந்து தாக்கும் தகவல் அறிந்து அவரது பெற்றோர் காவல்நிலையம் வந்தனர். அவர்கள் ஆனந்தை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது ஆனந்த் தன் பெற்றோரையும் சரமாரியாகத் தாக்கினார். ஒருகட்டத்தில் ஆனந்தும், அவரது தந்தையும் காவல் நிலையத்திலேயே கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.

ஒருகட்டத்தில் அவரது உறவினர்கள் சேர்ந்து ஆனந்தை காவல்நிலையத்தில் இருந்து பிடித்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும்நிலையில் குளச்சல் காவல்நிலைய போலீஸார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in