ஆட்டோ வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டவரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

ஆட்டோ வாங்க ஜாமீன் கையெழுத்து போட்டவரை கொல்ல முயற்சி: அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?

தனக்கு கடனுக்கு ஆட்டோ வாங்க ஜாமீன் கையெழுத்து போட்ட நபரையே வாலிபர் கொல்ல முயன்ற சம்பவம் போலீஸாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி ஊட்டினாவிளையைச் சேர்ந்தவர் அகஸ்டின் போன்சியாஸ்(60). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர்(42). இவர் தனக்குச் சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் எனவும், அதற்கு நிதி நிறுவனத்தில் கடன் கேட்டால் தெரிந்தவர்கள் ஜாமீன் கையெழுத்து போட வேண்டும் எனக் கேட்கிறார்கள் என போன்சியாஸை அணுகினார். அவரும் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அவர் திருப்பிக் கட்டிவிடுவார் என நம்பி ஜாமீன் கையெழுத்துப் போட்டார்.

ஆனால், அலெக்சாண்டர் ஆட்டோவுக்கு கடன் வாங்கிய நிதி நிறுவனத்தில் உரிய தவணைத் தொகையைச் செலுத்தவில்லை. இதனால் அவருக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்ட அகஸ்டின் போன்சியாஸ்க்கு கடிதம் வந்தது. இந்த கடிதத்துடன் அலெக்சாண்டர் வீட்டுக்குப்போன அகஸ்டின் போன்சியாஸ் இதுகுறித்துக் கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த அலெக்சாண்டர், அகஸ்டின் போன்சியாஸ் அவரது வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளை அரிவாளால் வெட்டினார். இதில் சீட் பகுதி கிழிந்தது. தொடர்ந்து அகஸ்டின் போன்சியாஸ்க்கும் கொலை மிரட்டல் விடுத்தார்.

ஜாமீன் கையெழுத்துப் போட்டவரையே அலெக்சாண்டர் கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அகஸ்டின் போன்சியாஸ் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் அலெக்சாண்டர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in