6 வயது குழந்தை, தாயை பாலியல் வன்கொடுமை செய்து ஏரியில் வீசிய கொடூரம்: காரில் லிப்ட் கொடுத்த கும்பல் அட்டூழியம்!

6 வயது குழந்தை, தாயை பாலியல் வன்கொடுமை செய்து ஏரியில் வீசிய கொடூரம்: காரில் லிப்ட் கொடுத்த கும்பல் அட்டூழியம்!

உத்தராகண்ட் மாநிலத்தில் ஓடும் காரில் தாயும், அவரது 6 வயது குழந்தையும் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் தன் 6 வயது மகளுடன் நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்று விட்டு வீிட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அறிமுகமான சோனு என்பவர் காரில் வந்துள்ளார். இளம்பெண்ணை வீட்டில் விடுவதாக கூறியுள்ளார். ஆனால், அந்த இளம்பெண் வேண்டாம் என்று மறுத்துள்ளார். ஆனால், குழந்தையுடன் இரவில் எப்படி போவீர்கள் என்று கட்டாயப்படுத்தி அவர்களைக் காரில் ஏறச் சொல்லியுள்ளார்.

இதை நம்பி தனது 6 வயது குழந்தையுடன் அந்த இளம்பெண் காரில் ஏறியுள்ளார். அப்போது காரில் சோனுவின் நண்பர்கள் சிலர் இருந்துள்ளனர். கார் சென்று கொண்டிருந்த போது திடீரென இளம்பெண்ணையும், அவரது 6 வயது குழந்தையையும் அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இதன் பின் அவர்கள் இருவரையும் ஒரு ஏரியின் அருகே கரையில் அந்த வீசி விட்டு சென்றனர்.

ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது குழந்தையின் அருகில் இருந்த காவல்நிலையத்திற்குச் சென்று அந்த இளம்பெண் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து சோனு மற்றும் அவரது கும்பலைத் தேடும் பணியில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in